lotus pond - 2026

விசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.

ஐயப்ப பூஜைக்கு தாமரைப் பூ பறிக்க குளத்தில் இறங்கிய மாலை அணிந்தவர்கள் இருவர் சேற்றில் கால்கள் சிக்கி நீரில் மூழ்கி இறந்தனர்.

ஐயப்பனுக்காக விரதம் இருந்து மாலை அணிந்த நரேஷ், கணேஷ் மற்றும் ஒருவர் என மூன்று இளைஞர்கள் சேர்ந்து தாமரை பூ பறிக்க ‘யலமஞ்சலி’ மண்டலம் ‘பெனுமர்ரு’ குளத்தருகில் வந்தனர்.

lotus pond vizhag - 2026

நரேஷும் கணேஷும் குளத்தில் இறங்கினர். சுமார் 15 அடி தூரம் சென்ற பின்னர் அவர்கள் இருவரும் ஒரேயடியாக நீரில் மூழ்கி அலறினர். உள்ளூர்வாசிகள் பதற்றம் அடைந்து, உடனடியாக குளத்தில் இறங்குவதற்குள் அவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்து விட்டனர் என்று கூறப் படுகிறது.

இந்தச் சம்பவம் விசாகப் பட்டினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending