அம்மா…! அப்பா எங்களை கொல்லுறார்… கதறிய சிறுமிகள்!

Published:

women - 2026

“அம்மா…! அப்பா எங்களை கொல்றார், அம்மா !” பெற்ற குழந்தைகளுக்கு தந்தை செய்த சித்திரவதை குறித்து வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேலும், வீடியோ எடுத்து வெளிநாட்டிலுள்ள மனைவிக்கு அனுப்பி பயமுறுத்தவும் செய்துள்ளார் அந்த நபர். எத்தனை கஷ்டங்கள் எதிர் வந்தாலும் கண்ணை இமை காப்பதுபோல் பிள்ளைகளை காக்கவேண்டிய தந்தையே கடமையை மறந்தார். தீய பழக்கங்களுக்கு அடிமை ஆனார்.

வேலை தேடி வெளிநாடு சென்று அங்கேயே பணிபுரிந்து கொண்டிருக்கும் மனைவி பணம் அனுப்பவில்லை என்று பிள்ளைகளை சித்திரவதை செய்து அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பினார் அந்த நபர்.

இந்தக் கொடுமை கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலத்தில் நடந்தது .

girls crying - 2026

‘உல்லம் பர்த்தி எலிஷா’வும் மகாலட்சுமியும் கணவன் மனைவியர். கீர்த்தி (8) , மம்மு (6) இவர்களின் மகள்கள். ஓர் ஆண்டுக்கு முன் மகாலட்சுமி வேலை நிமித்தமாக துபாய் சென்றார். அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு எலிஷா தீய பழக்கங்களுக்கு ஆளானார்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

அடிக்கடி பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்யத் தொடங்கினார். அவர் அனுப்பாததால் குழந்தைகளை சித்திரவதை செய்து, “அம்மா! அப்பாவுக்கு பணம் அனுப்பு… இல்லை என்றால் எங்களை கொன்று விடுவார், அம்மா!” என்று பேச வைத்து அவற்றை வாட்ஸ்அப் மூலம் மனைவிக்கு அனுப்பத் தொடங்கினார்.

எலிஷாவோடு கூட அவர் சகோதரியும் குழந்தைகளை கொடுமை செய்தாள். அந்த வீடியோக்களைப் பார்த்த மகாலட்சுமி தவித்துப் போனார். தன் உறவினர்களுக்கு அவற்றை அனுப்பி முறையிட்டார். அவை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதை அடுத்து, நரசாபுரம் டிஎஸ்பி கே. நாகேஸ்வர ராவு தலைமையிலான போலீஸார் எலிஷாவை கைது செய்தனர் .

father molesting girls - 2026

இந்தச் சம்பவம் பற்றி அறிய மாநில மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ‘தானேடி’ வனிதா செவ்வாயன்று நரசாபுரம் சென்றார். தந்தையின் கைகளால் சித்ரவதைக்கு ஆளான சிறுமிகளை டிஎஸ்பி அலுவலகத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார் .

தொடர்ந்து, துபாயில் உள்ள மகாலட்சுமியோடு குழந்தைகளை வீடியோ மூலம் பேச வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தச் சம்பவம் மனித தன்மைக்கு களங்கம்! குழந்தைகளின் தந்தை, அவர் சகோதரி இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

சிறுமிகளை ‘தணுக்கு’ வில் உள்ள ‘குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து பாதுகாப்பு அளிப்பதாக கூறினார். அவர்களைப் படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img