மதவெறியால்… மகளுக்கு நரகத்தைக் காட்டிய ‘சாத்தான்’கள்!

Published:

religious - 2026

அந்த டைரியைப் படித்த போலீசாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! அப்படி என்ன அந்த டைரியில் எழுதப்பட்டிருந்தது?

பிரேசில் போலீசாருக்கு கிடைத்த ஒரு 11 வயது சிறுமியின் டைரி அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

கிழக்கு பிரேசில் ‘உபாடுடா’ வைச் சேர்ந்த ‘பேரோலா பைர்ஸ்’ என்ற சிறுமி அண்மையில் மரணமடைந்தாள்.

அவளுடைய உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரோலா நீண்டகாலமாக உடலளவில் சித்திரவதைக்கு ஆளாகி உள்ளதாக அவர்கள் கண்டறிந்தனர். அவளுடைய உடலில் உணவு கலோரிகள் புரோட்டின் சதவீதம் மிகமிக குறைந்துள்ளதாக கண்டுபிடித்தனர்.

அதனால் பெரோலாவின் தாய் ‘அலைன்’, அவளுடைய இரண்டாவது கணவர் ‘என்ரீ’ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்ததில் உடல் ஒத்துழைக்காததால் பெரோலா 5 மாதங்களாக பள்ளிக்கூடம்கூட செல்லவில்லை என்பது தெரிந்தது.

அவள் வீட்டை சோதனையிட்ட போது ஒரு அறையின் மூலையில் ஒரு சிறிய பாயும் அதன் மீது இரு ஜோடி உடைகளும் இருப்பதை பார்த்தனர் . அவை பெரோலாவுடையதே என்று போலீசார் கண்டறிந்தனர். அங்கே அவர்களுக்கு ஒரு 300 பக்க டைரி கிடைத்தது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அதில் அந்த சிறுமி தான் தினமும் அனுபவித்த நரக வேதனையை வர்ணித்துள்ளாள். பெற்றோர் தனக்கு பல நாட்களாக உணவு அளிக்காமல் உடற்பயிற்சி செய்விப்பார்கள் என்று டைரியில் எழுதி உள்ளாள். அதனால் பசியோடு பல இரவுகள் தூங்காமல் கழித்ததாக குறித்துள்ளாள்.

அந்த முன்னூறு பக்கங்களையும் படித்த போலீசார் கண்ணீர் விட்டனர்.

பெரோலாவைப் போலவே நரக வேதனைக்கு ஆளான அவளுடைய எட்டு வயது தம்பியையும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பெரோலாவின் மரணத்திற்கு அவள் பெற்றோரே காரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.

ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று அலைன், என்ரீயை வினவியபோது, “தற்போது உலகம் சரியாக இல்லை. சிறு வயது முதலே நல்லது எது கெட்டது எது என்பதையும் இறைவன் மேல் பயத்தையும் போதிக்க வேண்டும். அவர்களின் ஆன்மாவையே பரிசுத்தம் செய்ய வேண்டும். அதற்கு உபவாசம் ஒன்றுதான் வழி. அதனால்தான் அப்படிச் செய்தோம்” என்று பேற்றினார்கள்.

மதவெறி பிடித்த அவர்களின் பதிலை கேட்ட போலீசார் இவர்களின் மதவெறியால் தான் பதினோரு வயது பெண் நரகம் அனுபவித்து இறந்தாள் என்று கண்டறிந்தனர். அதை அறிந்த உள்ளூர்வாசிகள் வருத்தம் அடைந்தனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img