திருப்தி தேசாயுடன் வந்த பிந்து மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடித்து தாக்குதல் நடத்தப் பட்டது. இது குறித்த வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்தி தேசாயுடன் சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கொச்சி வந்த கேரள பெண் பிந்து மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடித்து தாக்குதல் நடத்தப்பட்டது.
சபரிமலை கோயிலுக்கு செல்ல தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொச்சி மாநில காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற பிந்து மீது இந்தத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு திருப்தி தேசாயுடன் சபரிமலைக்கு செல்ல பிந்துவும் திட்டமிட்டு, அவருடன் காவல்துறை அனுமதி வாங்க கொச்சி ஆணையர் ஆலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது தன் மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடிக்கப்பட்டதாக அங்கிருந்த செய்தியாளர்களிடம் பிந்து தெரிவித்துள்ளார்.