ஆவேசத்தில் ஐதராபாத்! பிரியங்கா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வருகிறார் ஆளுநர் தமிழிசை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
priyanka case1 - 2026

இன்று சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பிரியங்காவின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில்,ஷாத்நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பரபரப்பு நிலவுகிறது. பிரியங்கா ரெட்டி கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மாணவர்களும் பொதுமக்களும் வற்புறுத்தி முழக்கம் எழுப்பினர்.

குற்றவாளிகளை தம்மிடம் ஒப்படைக்கும்படி முழக்கம் எழுப்பிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புக முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நிகழ்ந்தது.

குற்றவாளிகளை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதற்கான வழி இல்லாததால் மருத்துவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

priyanka case2 - 2026

இன்னும் சற்று நேரத்தில் ஷாத்நகர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஒப்படைக்க உள்ளனர்.

பிரியங்கா ரெட்டி குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவிப்பதற்கு தெலங்கணா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மதியம் 3 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு செல்ல உள்ளார்.

பிரியங்கா கொலையை பெடரேஷன் ஆஃ தெலங்காணா பார் அசோசியேஷன்கள் தீவிரமாக கண்டித்தன. குற்றவாளிக்கு எந்தவித நியாய உதவியும் அளிக்கக்கூடாது என்று மெகபூப் நகர் மாவட்ட பார் அசோசியேஷன் தீர்மானித்துள்ளது. குற்றவாளிகளின் பெயிலுக்காக யாரும் உதவக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.