அந்த பெண் டாக்டர் கொலையாளிகளுக்கு சிறையில் ‘மட்டன் விருந்து’!

Published:

murderers - 2026

திசா கொலையாளிகளுக்கு சிறையில் முதல்நாள் மட்டன் உணவு கொடுக்கப் பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய வெடரினரி டாக்டர் கொலை வழக்கின் குற்றவாளிகள் ‘செர்லபல்லி’ சிறையில் உள்ளனர். நால்வரையும் வேறுவேறு சிங்கிள் செல்களில் வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். பிற கைதிகளிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே இந்தப் பாதுகாப்பு.

murderers1 - 2026

சனிக்கிழமை இந்த நால்வரின் மீதும் பிற கைதிகள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அதனால்தான் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. எனவேதான் மற்ற சிறைக் கைதிகளோடு சேராமல் கவனமாக பார்த்துக் கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

சனிக்கிழமையன்று செர்லபல்லி சிறை முன்பு மகிளா சங்கங்களும் பிரஜா சங்கங்களும் போராட்டம் நடத்தின. குற்றவாளிகளுக்கு உடனே கடுமையான தண்டனை அளிக்கும்படி முழக்கம் எழுப்பினர்.

அதேபோல் இரு தெலுங்கு மாநிலங்களிலும் ஞாயிறு இரவு மெழுகுவர்த்தி ஊர்வலமும் கருப்பு ரிப்பன் அணிந்து எதிர்ப்பும் நடத்தப்பட்டன. திங்கள் கிழமை இன்றும் கூட மாணவர்களும் மகிளா சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!
murderers2 - 2026

இந்த நான்கு குற்றவாளிகளுக்கும் தாங்களாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருக்குமோ என்பதை கண்டறிய செவ்வாயன்று கவுன்சிலிங் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

இவர்களில் சென்ன கேசவலுவுக்கு சிறுநீரக கோளாறு பிரச்னை இருப்பதால் அவனுக்கு டயாலிசிஸ் செய்யும் தேவை இருக்கலாம் என்று மருத்துவ வசதி கொடுக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நால்வரும் இரவு உறங்காமல் கழித்தார்களாம். தாம் செய்த தவறு குறித்து எந்த பச்சாதாபமும் குற்ற உணர்வும் அவர்களிடம் காணப்படவில்லை என்கிறார்கள்.

murderers3 prison - 2026

ஞாயிறன்று காலை டிபனாக புளியோதரை, மதியம் சாப்பாடு (சிறை நிபந்தனைப்படி 250 கிராம்), இரவு உணவில் மட்டன் (சிறை நிபந்தனைப்படி ஞாயிறு மட்டன் உண்டு) அளித்துள்ளார்கள். இரண்டு தடவை டீ குடித்தார்கள்.

இவர்கள் இருக்கும் பாராக் செல்லுக்கு முன்புறம் கதவுக்கு கம்பிகள் பின்பக்கம் 13 அடி உயரத்தில் ஒரு வெண்டிலேட்டர் உள்ளது. ஒரு மூலையில் பாத்ரூம் உள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img