
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தமிழகத்தில் இலக்கியப் பேச்சாளர் என்று அறியப் பட்டவருமான நெல்லை கண்ணன் என்பவர், குடியுரிமை சட்டட்திருத்தம் குறித்து இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்த ( SDPI குடியுரிமை பாதுகாப்பு மாநாடு) கூட்டத்தில் பேசிய போது, மோடி குறித்தும் அமித் ஷா குறித்தும் இழிவுபடுத்துவதுடன் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
மோடிக்கு திருமணம் ஆனதை மறைத்தார் என்றும், பின்னர் அது ஒரு சர்ச்சை ஆன நிலையில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டார் என்றும் கூறி, இது போன்றவர்கள் பிரதமர் ஆக இருக்கின்றனர் என்று கூறி இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.
தொடர்ந்து, அமித் ஷாவை குறிப்பிட்டு, அவரது சோலியை நீங்கள்லாம் முடிச்சுடுவீங்கன்னு நெனச்சேன், ஆனா ஒண்ணும் செய்யாம இருக்கீங்களே என்று, இஸ்லாமியர்கள் கொலைகாரர்கள் என்றும், கொலைகாரர்களான நீங்கள் ஏன் இன்னும் அவர்களை கொலை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று காங்கிரஸ்காரருக்கே உரிய வன்முறை எண்ணத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ள பலரும் நெல்லை கண்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இது போல் எத்தனையோ விதமான அவதூறு மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் பேச்சுக்களை திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பேசியுள்ளபோதும், அமைதியான வழியில் பலர் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் போலீஸார் எடுக்காத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இருக்கிறது என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு சான்று கொடுத்து பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது.