பெண் வார்டு வாலண்டீரை கொடூரமாக கொலை செய்த பத்திரிகை நிருபர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
woman ward volunteer murder - 2026

விசாகப்பட்டினத்தில் வார்டு வெலென்டீரோடு ஒன்றாக இருந்து வந்தவர், இரும்புக் கம்பியால் தலைமீது ஓங்கி அடித்து கொன்றார்.

வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அந்தப் பெண்ணை கொன்றுள்ளார். குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். சென்ற நான்கு ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்திவருகிறார்கள். வேறு ஒருவரோடு தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தால் இரும்பு கம்பியால் தலைமேல் அடித்து கொன்றுள்ளார். பெண்மணியோடு ஒன்றாக வாழ்ந்து வந்தவரே கொடூரமாக கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சீபட்டினத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. நர்சீபட்டினத்தில் 22வது வார்டைச் சேர்ந்த ரெட்டி தேவி (35) வார்டு வாலென்டீராக பணி செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஆனால் கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த பின்னணியில் ஒரு டிவி சேனலில் நிருபராக வேலை செய்யும் திருமணமானவரான முரளி (40) என்பவருடன் ரெட்டி தேவகிக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான்காண்டுகளாக அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். பெதபொட்டேபல்லியில் வசித்து வருகிறார்கள்.

ஆனால் தேவிக்கு வேறு ஒருவரோடு தொடர்பு இருக்கிறது என்று முரளி சந்தேகம் கொண்டதால் அவர்கள் இருவர் இடையே அடிக்கடி சச்சரவு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் வேலையை முடித்துவிட்டு செவ்வாய் அன்று தேவி பிறந்த வீட்டுக்குத் திரும்பினார். அதற்குள் அங்கு வந்த முரளி அவரோடு சண்டையிட்டார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சண்டை சச்சரவு நடக்கும்போதே தேவி 100-க்கு போன்செய்து முரளி மது அருந்திவிட்டு வந்து தனக்கு தொல்லை கொடுக்கிறார் என்று போலீசுக்கு புகார் அளித்தார். ஆனால் போலீசார் வரும் முன்பே இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிர நிலைக்கு சென்று முரளி இரும்பு ராடு எடுத்து தேவியின் தலை மீது பலமாக அடித்தார்.

அதனால் தீவிரமாக காயப்பட்ட தேவி அங்கேயே விழுந்து மரணம் அடைந்தார் . உடனே முரளி சம்பவ இடத்திலிருந்து ஓடிப்போனார்.

ஏஎஸ்பி ரிஷாந்த் ரெட்டி சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தடைந்து உடலை பரிசோதித்தார். இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிஐ சுவாமி நாயுடு விசாரித்து வருகிறார்.

தேவியின் மரணத்தால் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளும் ஆதரவற்ற நிலையில் கதறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.