இன்று வேலை நிறுத்தம்! பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
02 July20 Lorry strike - 2026

இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன எதிர்க்கட்சிகள் இந்நிலையில் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புதுச்சேரியில் பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை! இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன. இதில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி  பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் இயக்கமும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் பாதிக்கப்படும்.

இதனிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.