ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன: தமிழிசை!

இந்தியா நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
tamilisai soundarrajan - 2026

100 ரூபாய்க்கே ஸ்கேனிங் செய்தேன். ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன… என்று தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

யசோதா மருத்துவமனை தலைமையில் இன்டர்நேஷனல் பல்மனாலஜி மாநாடு தொடக்கங்கப் பட்டது. இதில் பேசிய ஆளுநர் தமிழிசை, ஒரு டாக்டராக ஏழைகளுக்கு சேவை செய்த நாட்கள் தனக்கு மிகவும் திருப்தி அளித்தன என்று குறிப்பிட்டார்.

யசோதா மருத்துவமனை தலைமையில், ஹைதராபாத் நோவாடலில் ஏற்பாடு செய்யப்பட்ட இன்டர்நேஷனல் பல்மனாலஜி நேஷனல் ப்ராங்கஸ் 2020 மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இதனை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தான் சோனாலஜிஸ்ட் ஆக ஸ்கேனிங் சென்டர் நடத்திய நாட்களை அந்தக் கட்டத்தில் நினைவுகூர்ந்தார். அப்போது அரசாங்க மருத்துவமனைகளில் ஸ்கேனிங் பரிசோதனைகள் செய்ததில்லை. அதனால் பேங்கில் இருந்து லோன் எடுத்து அல்ட்ரா சவுண்டு இயந்திரத்தை எங்கள் சென்டரில் ஏற்பாடு செய்தோம் என்றார்.

100 ரூபாய்க்கு மிகாமல் மிகக் குறைந்த விலைக்கே ஸ்கேனிங் செய்ததால் அதற்கு நூறு ரூபாய் ஸ்கேன் சென்டர் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிட்டார். புதிதாக ஏற்பட்டுள்ள தெலங்காணா மாநிலத்தை புதிதாக பிறந்த சிசு போல தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

பல்மனாலஜியில் மிக நவீனமான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை யசோதா மருத்துவமனை எடுத்து வந்துள்ளது என்று குறிப்பிட்டு, எதிர் காலம் முழுவதும் பல்மனாலஜி தொடர்பானதாகவே இருக்குமென்றும் 2020 லிருந்து 2030 க்குள் இந்த துறை மிகவும் முன்னேறும் என்றார் யசோதா மருத்துவமனை எம்டி டாக்டர் ஜிஎஸ் ராவு!

இந்த தருணத்தில் யசோதா மருத்துவமனை எடுத்துவந்துள்ள இன்டர்நேஷனல் ப்ராங்கோஸ்கோபிக் தெர்மல் வேப்பர் (பிவிடிஎ) எந்திரத்தை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். சிகரெட்டுக்கு அடிமையாகி உடல் நலனைக் கெடுத்துக் கொண்டவர்களின் நுரையீரல்களுக்கு பிவிடிஏ மூலம் இறுதி முயற்சியாக சிகிச்சை அளிக்க முடியும்.

இரண்டு நாட்களாக நடக்கும் இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த மருத்துவத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டார்கள் என்று டாக்டர் ஹரிகிருஷண் தெரிவித்தார். நவீன வைத்திய முறைகளின் மேல் பயிற்சி நிகழ்ச்சிகள் இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் யூஜிமட்சிமோடோ, வெனரோனோ போலெட்டி, கைல் ஹோகார்த், லாம்பிங்க், தேவ் அனந்தம், டியூடர் தோமா, ஜம்சாக், ஜமாலுல் அஜீஜி, சுபகார், விஜயகுமார் மற்றும் பலர் பங்கு கொண்டார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.