December 6, 2025, 5:01 PM
29.4 C
Chennai

பரிதாபம்..! ஜிபிஎஃப் வருமா?! ஓய்வு பெறும் நாளில் கவலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்…!

telangana suicide1 - 2025

மாலை வேலையில் ஓய்வு பெற்றதற்கான சன்மானம்… விடியற்காலை அலுவலகத்தில் மரணம்… இது இந்த ஊழியரின் வாழ்க்கைச் சோகம்! அதுவும் அலுவலக இறுதி நாளே வாழ்வின் இறுதி நாளானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மாலை வேலை ஓய்வுக்கான விடை கொடுக்கும் தருணத்தில் அந்த நபர் இந்த உலகத்தில் இருந்தே விடைபெற்றார். அதற்குக் காரணம், எதிர்காலக் கவலை, எப்படி வாழ்க்கையை தள்ளப் போகிறோம் என்ற ஏமாற்றம் எல்லாம்தான்!

இறுதி நாளன்று பணி நிமித்தம் இரவுப் பணிக்கு வந்த அந்தப் பணியாளர் விடியற்காலை அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கினார். வேலையிலிருந்து மட்டுமல்ல… உலகத்தில் இருந்தே நிரந்தரமாக ஓய்வு பெற்றார். இந்த சம்பவம் அலுவலகத்தில் அனைவரையும் கலங்க வைத்தது.

தெலங்காணா பால்வன்ச என்ற இடத்தில் உள்ள கேடிபிஎஸ் கொத்தகூடம் தெர்மல் பவர் ஸ்டேஷன் அலுவலகத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது.

telangana suicide - 2025

வெங்கடேஸ்வர்லு கேடிபிஎஸ் ஐந்தாவது நிலை பிளான்ட் அட்டெண்டன்ட் ஆக பணிபுரிந்து வந்தார். வியாழனன்று அவருக்கு பணி ஓய்வுபெறும் இறுதி நாள். அன்று நைட் டூட்டி பார்க்க வந்த வெங்கடேஸ்வர்லு வேலை முடிவதற்கு சிறிது நேரம் முன்பு வெள்ளி அன்று விடியற்காலை தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தார்.

வேலையிலிருந்து ஓய்வு பெறும் அவருக்கு வெள்ளிக்கிழமை மாலை சன்மானம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வேலை ஓய்வு பெற்றபின் ஜிபிஎஃப் வராது என்று அவர் வேதனையில் இருந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே அவர் ஜிபிஎஃப் குறித்து கவலையில் இருந்தார். மாதம் ரூ 3000 மட்டுமே ஈபிஎஃப் வரும் என்பதால் அந்த தொகையில் பணி ஓய்வு பெற்ற பின் தன் குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற கவலையில் இருந்தார். பணிக் காலத்தை நீடிப்பதற்கு மிகவும் விரும்பினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை.

telangana suicide2 - 2025

அவர் குடும்பத்திற்கு நீதி கேட்டு பணியாளர்கள் சங்க தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அலுவலகத்திலிருந்து உடலை எடுத்துச் செல்ல விடாமல் ஆம்புலன்சை தடுத்தார்கள். அதிகாரிகள் அவர் குடும்பத்திற்கு ஜிபிஎஃப் கிடைக்கச் செய்வது தொடர்பாக முதலமைச்சர் கேசிஆரின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்களித்தனர். பின்னர் ஊழியர்கள் போராட்டத்தை நிறுத்தினர்.

வெங்கடேஸ்வர்லுவுக்கு இரு பெண்கள். ஒரு மகன். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சில மாதங்கள் முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டான். மகனையும் கணவரையும் சில மாதங்களுக்குள் இழந்த அவர் மனைவி உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories