
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் – ஐசிசி., டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி., துபையில் இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 823 புள்ளிகளுடன் முதன்முறையாக 2ஆம் இடத்துக்கு முன்னேறினார்.
அண்மையில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன் (224 ரன்) குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார் கே.எல்.ராகுல்.
இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா (662 புள்ளி) 10வது இடத்துக்கு முன்னேறினார். கேப்டன் விராத் கோலி (673) 9வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பும்ரா முன்னேற்றம்: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 630 புள்ளிகளுடன் 37வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு முன்னேறினார்.
தரவரிசைப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்த கே.எல் .ராகுல் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்!:
டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐசிசி!:
1)பாபர் – 879 புள்ளிகள்
2)ராகுல்- 823
3)ஃபின்ச் – 810
4)முன்ரோ – 785
5)மலன் – 782
6)மேக்ஸ்வெல் – 766
7)லெவிஸ் – 702
8)ஹஸ்ரதுல்லா – 692
9)கோலி – 673
10)ரோகித் – 662