தமது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேதபாடசாலைக்காக அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியன்.,!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
spb sankara vijayendrar - 2026

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், தமது மூதாதையர் இல்லத்தை காஞ்சி மடத்தின் வேத பாடசாலை அமைக்க, முறைப்படி ஒப்படைத்தார்.

நெல்லூருக்கு வந்திருந்தார் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். நெல்லூரில் திப்பராஜுவாரி தெருவில் அவருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இதனை வேதபாடசாலை அமைக்க அளிக்க வேண்டும் என்று எண்ணினார் எஸ்.பி.பி.,

இந்த நேரத்தில், நெல்லூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு வந்திருந்தார் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் நெல்லூருக்கு வந்து, சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றார். அப்போது, தமது நெல்லூர் இல்லத்தை காஞ்சி மடத்தின் சார்பில் நிறுவப் படவுள்ள சம்ஸ்க்ருத வேதபாடசாலைக்காக அளிப்பதாகக் கூறி, முறைப்படி ஒப்படைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.