ஐஎஸ்ஐ., மேற்கொண்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் – தில்லி வன்முறை; இந்திய முஸ்லிம்களே பாகிஸ்தானின் ஆயுதங்கள்!

Published:

delhi violence3 - 2026

தில்லி வன்முறைக்குப் பின்னால் ஐஎஸ்ஐ.,யின் சதி இருப்பது தற்போது வெளியாகியுள்ளது. வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உளவு அமைப்புகளிடமிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தில்லி வன்முறைக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகக் கூறப் படுகிறது.

தில்லி உட்பட பல நகரங்களில் வன்முறையைத் தூண்டுவதற்குப் பின்னால் ஐ.எஸ்.ஐ. ஆதாரங்களின்படி, போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்து பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் இயங்கி வருகின்றன. பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் இந்தியாவில் முஸ்லிம்களைத் தூண்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

delhi protest2 - 2026

குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக வடகிழக்கு தில்லியில் பரவிய வன்முறையில் தற்போது வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திங்கள்கிழமை தொடங்கிய இந்த வன்முறை செவ்வாய்க்கிழமை நேற்றும் தொடர்ந்தது. மேலும், இன்று காலையும் 144 தடை உத்தரவையும் கடந்து சில இடங்களில் வன்முறை கும்பல் கல்லெறிந்து சென்றன.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வன்முறைப் பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வர தில்லி போலீஸ் ஆணையரகத்துக்குச் சென்றார். டிசிபி வடகிழக்கு அலுவலகம் சென்ற அவர், சிறப்பு ஆணையர்கள், சதீஷ் கோல்ச்சா, இணை ஆணையர், அலோக் குமார், டி.சி.பி வேத் பிரகாஷ் சூர்யா ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வர, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் செவ்வாய்க்கிழமை இரவு சீலாம்பூரை அடைந்தார். அவருடன் தில்லி போலீஸ் சிறப்பு ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, தில்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், தில்லி போலீஸ் புரோ எம்.எஸ்.ரந்தவா மற்றும் தில்லி காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வன்முறை பாதிப்புக்குள்ளான ஜாபராபாத், சீலாம்பூர், மௌஜ்பூர், பாபர்பூர், பஜான்புரா, பிரிஜ்புரி இடங்களை அஜித் டோவல் பார்வையிட்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் வருகையின் போது, மக்கள் குச்சிகளை அசைத்து, பஜான்புரா பகுதியில் ஜெயஸ்ரீராம் கோஷங்களை எழுப்பி அவரை வரவேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அதே நேரத்தில் பிரிஜ்புரியில் கலவர எதிர்ப்பு அணியினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

இதனிடையே, பாலாகோட் தாக்குதல் நடந்த முதலாவது நினைவு தினத்தைக் குறிப்பிடும் வகையிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு பழி தீர்க்கும் வகையிலும், காஷ்மீர் விவகாரத்தில் ஏமாந்த நிலையிலும், அயோத்தி பிரச்னையின் போது உள்ளூர் முஸ்லிம்களை தூண்டி விட இயலாத நிலையிலும், முத்தலாக் சட்ட விவகாரத்தின் போது முஸ்லிம் பெண்களை எதிர்ப்புக்குக் கொண்டு வர இயலாத நிலையிலும், தற்போது சிஏஏ., விவகாரத்தை வைத்து முஸ்லிம் பெண்களை முன்னிறுத்தியே கலவரத்தை மேற்கொள்ளச் செய்வது என்பது பாகிஸ்தானின் திட்டம் என்றும், அதனை இந்திய முஸ்லிம்கள் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

Related articles

Recent articles

spot_img