
கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்! என்று, உலக சுகாதார நிறுவனம் ‘ஹு’ அறிவுறுத்தியுள்ளது. அது போல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹுவும் தனது வேண்டுகோளில், இந்தியாவின் இரு கை கூப்பி வரவேற்கும் ‘நமஸ்தே’ முறைக்கு மாற வேண்டும், கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல், ஜெர்மனியின் அதிபர் கலந்து கொண்ட கூட்டத்திலும், கைகுலுக்குவதில் இருந்து விடை பெற்று நமஸ்தே பாணிக்கு மாறுவதைக் குறித்து விளக்கும் வகையில் வீடியோ வைரலாகி வருகிறது.
இது தொடர்பான இன்னும் சில வீடியோக்களில் கைகுலுகுவதைத் தவிர்த்து, காலால் தட்டித் தட்டி, சிநேகத்தை சீனர்கள் சிலர் வெளிப்படுத்துவது போன்ற வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, இத தாண்டா! இந்த தாத்தா அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன்! எல்லாம் உங்க நல்லதுக்குதண்டா சொல்றேன்!என்று குறிப்பிட்டு, கையெடுத்துக் கும்பிடும் முறைக்கு வாங்க வழிக்கு… என்று கருத்துகள் வைரலாகி வருகின்றனன்.
கோரோனா வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு, கைகுலுக்குவதாலோ, கட்டி அணைப்பதாலோ, ஒருவருடன் ஒருவர் தொட்டு உறவாடி நெருக்கம் கொண்டிருந்தாலோ, ஒருவர் பயன்படுத்திய பொருளை மற்றவர் தொட்டு பயன்படுத்துவதாலோ வைரஸ் பரவுகிறது என்று கூறுகின்றனர்.
பொதுவாக, மூக்கில் ஒழுகும் நீர், சளி, ஜலதோஷம் இவற்றின் மூலம் தொட்டுத் தொட்டு, அடுத்தவர் வழியே பரவுகிறது. இது காற்றின் மூலம் பரவுவதில்லை! எனவே முகமூடி அணிந்து கொள்வதெல்லாம் தேவையற்றது, முகமூடியை சரி செய்வதற்காக அடிக்கடி கையை முகத்தின் அருகே கொண்டு சென்று, கண்களில் தொட்டு அதன் மூலமும் இந்த வைரஸ் பரவும் என்று குறிப்பிடுகிறார்கள்.