பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினரே காதலர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூரை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து அங்கு தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் இரவு ரைடுக்கு சென்ற புதுவை காவல்துறையினர் அறை ஒன்றில் காதல் ஜோடி தங்கி இருந்ததை பார்த்து அவர்களிடம் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் காதலர்களை மிரட்டிய போலீசார் இருவர் அவர்களிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து காதலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு காவலர்கள் மீது காவல்துறையினர் விசாரணை செய்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது
அதன் பின்னர் அவர்கள் பணம் பறித்த சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது காவலர்கள் இருவர் காதலர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது