மருமகனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த மாமியார் ஒருவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை என்ற பகுதியை சேர்ந்த வசந்தா என்பவர் தன் கணவனைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் தனது மகளுக்கு சுபனன் என்பவரை திருமணம் செய்து வைத்து அவரை வீட்டிலேயே மகளையும் மருமகனையும் தங்க வைத்து இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் மகளின் கணவருடன் அதாவது மருமகனுடன் வசந்தா கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தற்செயலாக ஒருநாள் பார்த்த மகனையும் இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது
இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது மருமகனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை மகன் பார்த்து விட்டதாகவும் அவன் தனது தந்தையிடம் கூறி விடுவான் என்ற பயத்தில் கொலை செய்துவிட்டதாகவும் வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்
இதனையடுத்து காவல்துறையினர் வசந்தா மற்றும் சுபனன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது