மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் வீட்டிலேயே தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் கடந்த மார்ச் 14ம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்றார். அப்போது ஸ்பெயினில் இருந்து திரும்பி வந்த மருத்துவர் ஒருவரும் அதில் பங்கேற்றார். அவருக்கு மார்ச் 15ம் தேதி கொவிட் 19 வைரஸ் தொற்று பாஸிட்டிவ் என்று வந்தது.
இந்த நிலையில் கூட்டத்துக்குச் சென்றுவந்த இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்ததால் திருவனந்தபுரத்தில் அவர் வீட்டுக்குள் தனிமையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.