தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமச்சந்திரன் காஷ்மீரில் பணியில் இருந்த போது நெஞ்சுவலியால் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா காரணமா அவரது உடலை கொண்டுவர முடியாததால் உறவினர்கள் வேதனையில் உள்ளனர்.
ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்குச் சென்றார். தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராமச்சந்திரன் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படுமா என்கிற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் ராணுவ வீரர்கள் இறந்தால் எப்போதும் பின்பற்றப்படும் நடைமுறையைப் போல ராமச்சந்திரன் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், ராணுவ வீரர்கள் இறந்தால் எப்படி மரியாதை செய்து இறுதி அஞ்சலி செலுத்தி அவர்கள் உடலை அடக்கம் செய்வார்களோ அதே போல் குண்டுகள் முழங்க அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கிராம மக்களும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்