தங்களுக்கு நல்லது செய்ய வந்த நல்வாழ்வுத்துறைப் பணியாளர்கள் மீது கற்களை வீசியெறிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுதும் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசமாநிலம் இந்தூரில் ஆய்வுக்காகச் சென்ற நலவாழ்வுத்துறை அலுவலர்கள் மீது கற்களை வீசிஎறிந்து அப்பகுதியினர் விரட்டியடித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அவ்வாறு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே அவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து கண்காணிப்பில் வைக்கப் பட்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையில், மத்தியப் பிரதேசம் இந்தூர், தத்பட்டி பாகல் என்னுமிடத்தில் ஆய்வுக்காகச் சென்ற நலவாழ்வுத்துறை அலுவலர்களைப் பொதுமக்கள் கற்களை வீசியெறிந்தும் தகாத சொற்களால் திட்டியும் விரட்டியடித்துள்ளனர். பரிசோதனைக்காகச் சென்ற டாக்டர்கள் உள்ளிட்டசுகாதாரப் பணியாளர்கள் மீது அப்பகுதியின் ஒரு பிரிவைச் சார்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் காயமடைந்தனர்.
சுகாதாரப் பணியாளர்கள் மீது அப்பகுதியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் 2 பெண் டாக்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.