
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்யாவசிய பொருட்களை வாங்குவதை தவிர வேறு எந்த காரியத்துக்காகவும் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான ரிஷிகேஷில் போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது கங்கை நதிக்கரையில் வெளிநாட்டினர் உலாவுவதை கண்டனர்.
உடனே அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். ஊரடங்கு அமலில் இருப்பதை அறிந்து, அவர்கள் ஊர்சுற்ற வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர்களுக்கு நூதனமாக தண்டனை வழங்கினர்.
நான் ஊரடங்கை பின்பற்றவில்லை.
என்னை மன்னித்துவிடுங்கள் என்று ஒரு பேப்பரையும், பேனாவையும் கொடுத்து 500 முறை எழுத சொல்லி இருக்கின்றனர். வெளிநாட்டினரும் 500 முறை எழுதியுள்ளனர்.