நகராட்சி பகுதிகளில் சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கலாம்..!

இந்தியா சற்றுமுன் வணிகம்
vellore briyanishop - 2026

நாடு முழுவதும் உள்ள நகராட்சிப் பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் இந்த உத்தரவு, கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளுக்குப் பொருந்தாது, இந்த உத்தரவு கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் தளத்துவதற்கான உத்தரவு ஆகாது.

இந்தியாவில், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்ற நிலையில் 50 சதவீத அளவில் சில்லறை விற்பனை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவால் கையொப்பம் இட்டு வெளியான உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது…

நகராட்சி பகுதிகளில் உள்ள மல்டிபிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்கள் மே மாதம் 3 ம் தேதி வரை மூடப்படும், சில்லறை வர்த்தகக் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப் படும் .

23 July23 shop bandh - 2026

50 சதவீத கடைகள் இயங்கலாம். முகக் கவசம் அணிவது, சமூக விலகலைக் கடைபிடிப்பது ஆகியவற்றை மிக முக்கியமாக செயல்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது!

shops opened
shops opened

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.