crpf 2

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு காஷ்மீரில் மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending