இந்தியா -பாக்., போட்டியும், உருவான சர்ச்சைகளும்!

Published:

cricketers-indian

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். பாகிஸ்தான் ரசிகர்கள் அணியை திட்டித் தீர்த்தனர். பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தப் போட்டியைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போட்டியைக் கண்டு கொண்டிருந்த ரசிகர்கள், பெரும் டென்ஷன் அடைந்தனர். அதுவும், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள், பல இடங்களில் டிவி.,க்களை அடித்து உடைத்தனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். டுவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்ட இம்ரான் கான், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சரமாரியாக சாடினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை என்றால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இடைவெளி மேலும் நீடிக்கும் என குறிப்பிட்டார். மேலும், தோல்வியும், வெற்றியும் விளையாட்டின் அங்கம் என ஒரு விளையாட்டு வீரரான எனக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தான் எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்காமல் இந்தியாவால் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டு வருவது பெரும் வலியைத் தருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இது குறித்து கருத்து தெரிவித்த அப்ரிடி, ‘இந்தியா – பாகிஸ்தான் இடையில் ஒரு போட்டி நடக்கிறது என்றால், நம்மை அறியாமல் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ளும். ஆனால் எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிவது போல்தான் போட்டி அமைந்தது. ஒரு பாகிஸ்தான் ஆதரவாளராக இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்தியா முதலிலிருந்தே போட்டியை வெல்வது போல்தான் ஆடியது. கடைசி வரையிலும் அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டது. என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானுடன் ராணுவ உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இப்படி ஒரு போட்டி தேவையா என்று கேள்வி எழுப்பினர் பலரும். இந்திய ராணுவம், இனி இந்திய கிரிக்கெட்டர்களுக்கு மரியாதை அளித்து, அவர்களின் உடையை அணிவித்து அழகு பார்க்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ராணுவம் பரிசீலிக்கிறது என்று சிலர் டிவிட்டரில் கூறியிருந்தனர்.

 

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img