ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம் குறித்து… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
nirmalaseetharamanji3 - 2026

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர், பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ருபாய் மதிப்பிலான சிறப்பு திட்டம் பற்றி செய்தியாளர்கள் முன்னர் விளக்கம் அளித்தார்.

உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச பிராண்டுகளாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்று கூறிய அவர், இந்தியாவில் தொழில்களை நடத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் எளிதாக்கப்படும் என்றார். மேலும், மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், இந்தியா மின்மிகை நாடாக உருவெடுத்துள்ளது என்றும், பொருளாதாரம், தொழில்நுட்பம், தேவை, உட்கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவையே சுயசார்புக்கான 5 தூண்கள என்றும் விளக்கினார்.

41கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு மூலம் ரூ.52,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

nirmala seetharaman ji

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தவை…

சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்கப் படும். சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் – பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்.

நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள். மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது !

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன.

பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது!

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

மேலும், 41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன. 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

nirmala seetharaman ji

இடையே, உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது என்று நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர். தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதில் முக்கிய அம்சங்கள்:

  1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சர்வதேச பிராண்டாக மாற்றுவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.
  2. ஏழை மக்களின் நலனுக்காக இந்தியா செயல்படுத்தி வரும் திட்டங்களை பல நாடுகள் செயல்படுத்த முடியவில்லை.
  3. இந்தியாவில் தொழில்களை நடத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் எளிதாக்கப்படும்.
  4. சிறப்பு திட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு பெறுவது மட்டுமன்றி உலகமும் பயனடையும்.
  5. வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதன் மூலம் ஏழைகள் பயன் பெற்றுள்ளனர்.
  6. மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் இந்தியா மின்மிகை நாடாக உருவெடுத்துள்ளது.
  7. மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை உருவாக்கவே பொருளாதார சீர்திருத்தங்கள்.
  8. ஜி.எஸ்.டி – யில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நிதி கட்டமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.
  • ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.
  • ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்
  • கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை.
  • RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
  • ஏற்கனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள்.
  • சிறப்பாக செயல்படும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.50,000 கோடி கடன் வழங்கப்படும்.
  • ஜூன், ஜூலை, ஆக., பிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தும்.
  • தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அரசு செலுத்தும்.
  • வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்
  • ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.
  • ரூ.200 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அரசுத்துறையில் இனி உலக அளவில் டெண்டர் கோரா தடை விதிக்கப்படும்
  • வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ30 ஆயிரம் கோடி நிதி உதவி
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
  • சிறு, குறு நிறுவனங்களின் EPF தொகையை அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசு செலுத்தும்
  • ஜூன், ஜூலை, ஆக. மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பையும் அரசு வழங்கும்.
  • ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பை மத்திய அரசு வழங்கியது.
  • மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும்.
  • வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும்
  • சிறு நிறுவனங்கள் இ-மார்கெட்டிங் மூலமாக பொருட்களை விற்க வசதி ஏற்படுத்தி தரப்படும்
  • வர்த்தக கண்காட்சிகள், பொருட்காட்சிகள் நடத்தப்பட இயலாத சூழ்நிலையில் ஆன்லைன் சந்தைகள் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு உருவாக்கப்படும்.
  • 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • 4 ஆண்டு காலங்களில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும்.
  • 12 மாதங்கள் கழித்துதான் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலமும் தொடங்கும்.
  • வருமான வரி செலுத்துவோருக்கு ரூ18,000 கோடி நிலுவை தொகை திருப்பி தரப்பட்டுள்ளது.
  • வருமானவரி செலுத்துவோர் 14 லட்சம் பேர் ரீ பண்ட் நிலுவை தொகைகளை பெற்றுள்ளனர்.
  • அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம்.
  • ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.
  • நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி துணைக்கடன் வழங்கப்படும்
  • நிதிக்குள், நிதி” திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம்
ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
  • ஒப்பந்ததாரர் வங்கி உத்தரவாதம் 6 மாதம் நீட்டிப்பு.
  • சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம்.
  • அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம்.
  • கொரோனா நிகழ்வை கடவுளின் செயலாக கருதி, ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்.
  • கடந்த மார்ச் 25க்குள் கட்டுமானத்தை முடித்து, நிறைவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கு அவகாசம்
  • வருமான வரி தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம்.
  • வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு.
  • வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு
  • ஊதியம் வழங்கும் போது பிடிக்கப்படுகிற வருமான வரி தொகையில் (TDS) 25% குறைப்பு.
  • ஊதியம் வழங்கும் போது பிடிக்கும் வருமான வரி தொகையில் 25% குறைப்பு, நாளை முதல் மார்ச் 2021 வரை குறைப்பு
ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.