திருமலை: ஒருபக்கம் லாக்டௌனால் மக்கள் தொல்லைக்கு உள்ளாகி வருகையில் திருடர்கள் தன் வேலையை உஷாராக செய்துவருகிறார்கள்.
திருமலையில் லாக்டௌன் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் திருடர்கள் கடைக்குள் புகுந்து அங்குள்ள சரக்குகளைத் திருடி வருகிறார்கள். ஏற்கனவே பல கடைகளில் இதே சூழ்நிலை நிலவுகிறது. தற்போது புதிதாக திருமலையில் மற்றுமொரு திருட்டு வெளிப்பட்டுள்ளது.
மூடியிருந்த கடைக்குள் புகுந்து சிசி கேமராவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி. இந்த காட்சிகள் அனைத்தும் மற்றுமொரு சிசி கேமராவில் பதிவாகி உள்ளன. முகத்தை மாஸ்க் போட்டு மறைத்து கொண்ட ஒரு பெண் கடைக்கு உள்ளே புகுந்து சிசி கேமரா உடைக்க முயற்சித்தார். அதன்பின் கடையில் உள்ள பொருட்களை எல்லாம் திருடிச் சென்றார்.
இந்த திருட்டு மே 3ஆம் தேதி நடந்ததாக சிசிடிவி புடேஜ் ஆதாரமாக தெரிய வருகிறது. கொஞ்சம் தாமதமாகவே வெளிச்சத்தை கண்ட இந்த சம்பவம் மீது போலீசாருக்கு கடை உரிமையாளர் புகார் கொடுத்தார்.
வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் இன்னும் எத்தனையெத்தனை கடைகளில் திருட்டு நடந்துள்ளதோ… இனிமேல்தான் தெரியவரும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமராவில் சிக்கிய அந்த வீடியோ….