snake 1 - 2026

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு சிறிய வீட்டிற்குள் இருந்து கடந்த ஒரு வாரத்தில் 123 விஷப்பாம்புகள் பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் ஜீவன் சிங் குஷ்வா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில், கடந்த வாரம் சில குட்டிப் பாம்புகள் தென்பட்ட நிலையில், அதிர்ந்து போன அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களின் உதவியுடன் பாம்புகளை வெளியேற்றினார்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவரது வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் நாகப்பாம்புகள் சாரை சாரையாக படையெடுக்கத் தொடங்கின. கடந்த ஒருவாரத்தில் சுமார் 123 விஷப்பாம்புகள் அவரது வீட்டிற்குள் எங்கிருந்தோ தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்துள்ளன. இதனைக் கண்டு அச்சத்தில் உறைந்த ஜீவன் சிங், ‘வீட்டுக்குள் பாம்பு.. வெளியே சென்றால் கொரோனா… தூங்கவே முடியவில்லை. நான் எங்க போறது?’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே ஜீவன் சிங்கின் வீட்டில் ஏதோ ஒரு பகுதியில் பாம்பு முட்டை போட்டிருக்க வேண்டும் என்றும் அதில் இருந்து குட்டிப் பாம்புகள் நூற்றுக்கணக்கில் வெளியேறுவதாகவும் சந்தேகித்த வனத்துறையினர், ஜீவன் சிங்கின் வீட்டில் குட்டிப் போடும் பாம்பினையும் இதர பாம்புகளையும் தீவிரமாகத்தேடி வருகின்றனர். இந்நிலையில் பாம்புகளின் இந்தத் தொடர் படையெடுப்பை அக்கிராம மக்கள் கெட்ட சகுனமாகக் கருதுவதால், மேலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending