
விற்பனைக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் சொத்துக்கள்…
23 அசையா சொத்துகளை
ஏலம் விட தீர்மானம்.!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலத்தை விற்பதற்கு டிடிடி தீர்மானித்துள்ளது. 23 சொத்துக்களை பகிரங்கமாக ஏலம் மூலம் விற்பதற்கு திதிதே., உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்பதற்கு தீர்மானித்துள்ளது. மொத்தம் 23 இடங்களில் உள்ள அசையாச் சொத்துகளை பகிரங்க ஏலம் மூலம் விற்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வருடம் பிப்ரவரி 29 இல் நடந்த தர்மகர்த்தா மண்டல கூட்டத்தில் அசையாச் சொத்துக்களை விற்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஏப்ரல் 30ல் போர்டு உத்தரவுகளை வெளியிட்டது. இந்த விஷயம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 23 இடங்களில் உள்ள அசையாச் சொத்துகளை விற்பதற்காக இரண்டு குழுக்களை ஏற்பாடு செய்தது. இந்த இரண்டு குழுக்களிலும் எட்டு பேர் அதிகாரிகளை நியமித்து போர்டு உத்தரவிட்டது. சொத்துகளின் ஏலத்திற்கு தொடர்பான சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு போர்டு அறிவுறுத்தியது.

ஆனால் திருமலை கோயிலின் சொத்துக்களை ஏலம் விடுவது பற்றி ஆந்திர பிரதேஷ் பிஜேபி தலைவர் கன்னா லட்சுமி நாராயணா பரபரப்பு விமர்சனம் செய்துள்ளார். அசையாச் சொத்துகளை விற்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதி பாலாஜிக்கு பக்தர்கள் கொடுத்த சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்கு மாத்திரமே உரிமையுள்ள நீங்கள் எவ்வாறு ஏலத்தில் விற்பதற்கு முன் வந்தீர்கள் என்று அவர்களை கேள்வி கேட்டார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விஷயத்தில் அரசாங்கத்தின் நடைமுறை பற்றி பிஜேபி போராடிக் கொண்டே வருகிறது என்று எச்சரித்துள்ளார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் பரிபாலன மண்டலி பரபரப்பு தீர்மானத்தை எடுத்துள்ளது. சென்ற முறை திதிதே போர்டு செய்த தீர்மானத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டில் வேறு வேறு மாவட்டங்களில் இருக்கும் ஸ்ரீவாரி நிலங்களை விற்பதற்கு தயாராகியுள்ளது. சும்மா கிடக்கிறது என்று காரணம் காட்டி 23 இடங்களில் உள்ள விவசாய நிலங்கள், பிளாட்டுகளை விற்பதற்கு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது திதிதே போர்டு.
இதற்காக 8 அதிகாரிகளைக் கொண்ட இரண்டு கமிட்டிகளை நியமித்துள்ளது. அவற்றின் ரிஜிஸ்ட்ரேஷன் பொறுப்புகளை கூட அவர்களுக்கே ஒப்படைத்துள்ளது. அந்த சொத்துக்களை பகிரங்க ஏலம் மூலம் விற்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆணையிட்டுள்ளது.
திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், தர்மபுரி, விழுப்புரம், காஞ்சி, கோயம்புத்தூர், வேலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் வேறு வேறு இடங்களில் இந்த நிலங்கள் உள்ளன. ஏலத்திற்கு தொடர்பாக நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலையின்படி அந்த நிலங்கள் சுமார் ஒன்றரை கோடிக்கு மேலாக மதிப்புள்ளதாக தெரிகிறது.

ஸ்ரீவாரி சொத்துக்களை விற்பதற்கு திதிதே தயாராவதைப் பார்த்து அரசியல் கட்சிகள் மற்றும் பல வித அமைப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. வேங்கடேசப் பெருமாளின் சொத்துகளை விற்க வேண்டிய தேவை என்ன வந்தது என்று பலரும் எரிச்சல் அடைந்துள்ளார்கள்.

இந்தத் தீர்மானத்தை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனசேனா, காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. வீணாகிக் கொண்டிருக்கும் சொத்துகள் என்ற பெயரில் திதிதே ஆஸ்திகளை விற்பதை நிறுத்த வேண்டுமென்று ஏபிசிசி தலைவர் சைலஜாநாத் வலியுறுத்தியுள்ளார்.
காப்பாற்ற இயலாது என்று கூறி திதிதே கோயில் சொத்துக்களை விற்பது பற்றி சந்தேகம் எழுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.



