கேரளத்தில் முககவசத்தில் நம்முடைய முகத்தை ப்ரிண்ட் செய்து அடையாளம் தெரிவதற்கு ஏதுவாக ஒரு கடை செய்து கொடுக்கிறார்கள்
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வெளியில் நடமாடுவோர் அனைவரும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. முக கவசம் அணியாமல், வெளியே நடமாடுவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது.
இதனால் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர் மருந்தகம் மட்டுமன்றி, பெட்டி கடை முதல், பல சரக்கு மளிகை கடைகளிலும் முக கவசம் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், குழந்தைகளை கவரும் கார்ட்டூன் படங்களும், இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கேற்ப நடிகர் – நடிகையர் படம் அச்சிடப்பட்ட முக கவசங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
இதில் பலருக்கு முககவசம் அணிவதால் தங்கள் முகம் தெரிவதில்லை என்ற ஏக்கமும் கவலையும் இருக்கிறது. இன்னுமொரு விஷயம் அறிமுகமான முகத்தைக்கூட அறியமுடியவில்லை என்ற கவலையும் உள்ளது.
இந்நிலையில் கேரளாவில் ஒரு கடையில் அவரவர் முகத்தை அணியும் மாஸ்கில் ப்ரிண்ட் செய்து தருகின்றனர் இந்த வீடியொ வைரலானது
அதே வகையில் தற்பொழுது காஞ்சிபுரத்தில் உள்ள, டி.டி.பி., சென்டர் ஒன்றில், ‘உங்கள் முகத்தையே முக கவசமாக மாற்றித் தருகிறோம்’ என, அறிவித்துள்ளனர்.
‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம் கொடுத்தால், அதில் உள்ள படத்தையே முக கவசத்தில் அச்சிட்டு தருகின்றனர். இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, முக கவசம் வடிவமைப்பாளர்கள் ஜெயசெல்வன், ஜெயமுத்து கூறியதாவது: முக கவசம் அணிந்து செல்லும்போது, முகம் பாதியளவு மறைந்து விடுகிறது.
இதனால், அவரவர் முகத்தையே, ‘பிரின்ட்’ செய்து முக கவசம் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை காலையில் கொடுத்தால், மாலையில், அவரவர் முகம் அச்சிட்ட, ‘பாலி காட்டன்’ துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசத்தை வழங்குகிறோம்.
அவரவரின் முகமே அச்சிட்டு தருவதால், காஞ்சிபுரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்தத் துணியால் ஆன முக கவசம் அணிவது நல்லதா என்பது குறித்து, மருத்துவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.