
திருமலா திருப்பதி தேவஸ்தானம் அசையா சொத்துக்கள் விற்பனை குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த தீர்மானத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அப்போது வரை ஏலத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசாங்கம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
திருமலை திருப்பதி பக்தர்களின் எதிர்ப்பலைகளை மனதில் கொண்டு திருமலா திருப்பதி தேவஸ்தானம் அசையா சொத்துக்களை விற்கும் எண்ணத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை சொத்துக்களை விற்கும் முயற்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்படி ஆந்திரப் பிரதேச அரசாங்க முதன்மைச் செயலர் பிரவீன் பிரகாஷ் பெயரில் திங்களன்று மாலை (ஜிஓ ஆர்டி நம்பர் 888) உத்தரவுகள் வெளியிட்டுள்ளது.

சென்ற தெலுங்குதேசம் அரசாங்கம் ஏற்பாடு செய்த டிரஸ்ட் போர்டு 50 அசையா சொத்துக்களை விற்பதற்கு 2016 ஜனவரி 30 ஆம் தேதி தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பார்வைக்கு வந்துள்ளது. ஆனால், பக்தர்களின் எதிர்ப்புகளை மனதில் கொண்டு அந்த அம்சத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சொத்துக்களை ஆலயங்களின் நிர்மாணத்திற்கும் தர்ம பிரச்சாரத்திற்கும் இதர மத காரியங்களுக்கும் உபயோகிக்கலாமா என்பதை தீர்மானிப்பதற்கு மத பெரியவர்களையும் இதுகுறித்து தீர்மானிக்கக்கூடிய அறிஞர்களையும் பக்தர்களின் குழுக்களையும் பிற பல்வேறு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விஷயம் ஒரு வழிக்கு வரும் வரை திதிதே 50 அசையா சொத்துக்களை விற்கும் எண்ணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அதற்கு தொடர்பான திதிதே எக்சிக்யூடிவ் ஆபீசர் தேவையான செயல்களை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.