
கொரோனா வைரஸ் பாதிப்புகளும், ஊரடங்கு சிக்கல்களும் தொடரும் நேரத்தில் சில விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு தாய் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தர்மேந்திர குமார் மற்றும் ரேணு இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளன. கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என்ற பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர்.
குழந்தைகள் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும். இந்த பெயர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் எனவும் குழந்தைகளின் பெற்றோர் மேலும் தெரிவித்துள்ளனர்