December 6, 2025, 4:56 AM
24.9 C
Chennai

தூக்கத்தில் கூட தோனி புலம்புகிறார்… பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார்: சாக்‌ஷி வருத்தம்!

pubg dhony

பப்ஜி மொபைல் போன் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார் தோனி. அவர் தூக்கத்தில் கூட புலம்புகிறார் என்று அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டா சேட்டில் வருத்தப் பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மாற்றத்துக்கான விதையை ஊன்றியவர் என்று பாரட்டப் படும் மகேந்திர சிங் தோனி, தற்போது மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல் கூட இல்லாமல், இந்தக் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாக்ராமில் கூட வருவதில்லை.

தன் வீட்டில் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வரும் அவர் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ்அணியின் அதிகாரபூர்வ ‘இன்ஸ்டாகிராம்’ இணையதளத்தில், தோனியின் மனைவி சாக்‌ஷி உரையாடினார். அப்போது தோனி வீட்டில் என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த சாக்‌ஷி, தோனி எதையும் நன்கு யோசிக்கக் கூடியவர். அந்த மூளை எப்போதும் சும்மா இருக்காது. வீடியோ ‘கேம்’ விளையாடுகிறார். இது அவரது மனசை திசைதிருப்ப உதவுகிறது. இப்போதெல்லாம் தோனியின் பப்ஜி விளையாட்டு, எனது படுக்கையை ஆக்கிரமித்து விட்டது. தூக்கத்தில் கூட பப்ஜி குறித்தே அதிகம் பேசுகிறார்… என்று கூறினார்.

எம்.எஸ். தோனியை சமூகத் தளங்களில் பின்தொடர்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், முன்னாள் இந்திய கேப்டன் ஒரு வீடியோ கேம்களின் பெரும் ரசிகர் என்று! அதிலும் குறிப்பாக PUBG விளையாட்டின் தீவிர ரசிகர் என்பது. PUBG விளையாட்டுடன் தோனிக்கு இருக்கும் தீவிர பற்று குறித்து அவரது அணியினர் கூட அடிக்கடி பேசியிருக்கிறார்கள்.

“அவருக்கு என்று ஒரு சிந்தனை மூளை உள்ளது, அது ஓய்வெடுக்காது. அவர் வீடியோ கேம்களை விளையாடும்போது, ​​அவரது மனதைத் திசைதிருப்ப உதவுகிறது! இது ஒரு நல்ல விஷயம்தான். இப்போது PUBG என் படுக்கையை ஆக்கிரமி விட்டது. மஹி இந்த நாட்களில் PUBGயைப் பற்றியே அதிகம் பேசுகிறார்! என்று, சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு நேரடி வீடியோ அமர்வின் போது சாக்‌ஷி, ரூபா ரமணியிடம் கூறினார்.

ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காலத்திலும், வேறு கிரிக்கெட் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாத காலத்திலும் எம்.எஸ்.தோனி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு, சி.எஸ்.கே கேப்டன் தோனி, பைக்குகளை அசெம்பிள் செய்து வருகிறார் என்றார் சாக்‌ஷி.

மஹியிடம் 9 பைக்குகள் உள்ளன. அவர் அவற்றின் பாகங்களைக் கழற்றி, புதிய பாகங்கள் வாங்கி அவற்றை மீண்டும் அசெம்பிள் செய்து நேரம் போக்குவார் . அவர் ஒரு பைக்கை அசெம்பிள் செய்து அதை முழுமையாக முடித்து எடுத்துச் சென்றார், ஆனால், அதில் ஒரு பகுதியை சேர்க்க மறந்துவிட்டார், இருப்பினும் மறுநாள் அவர் அந்த பைக்கை மீண்டும் திறக்க வேண்டியிருந்தது, அதையெல்லாம் அவர் மீண்டும் அசெம்பிள் செய்தார், ” என்றார் சாக்‌ஷி.

தோனி எந்த விஷயத்திலும் அமைதியாகவே இருப்பார். நான் மட்டுமே அவரை ‘அப்செட்’ செய்ய முடியும். அவரது கோபத்தைத் தூண்ட முடியும். இதனால் அவர் என் மீது கோபத்தை வெளிப்படுத்துவார். ஏனெனில் நான் மட்டுமே அவருக்கு நெருக்கமானவராக உள்ளேன்

“உங்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியிருக்கும்போது, ​​ஒருவருக்கொருவர் உள்ளேயும் வெளியேயும் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். யாரும் அவருடன் சண்டையிடுவதில்லை. நான் மட்டுமே.”என்றார் சாக்‌ஷி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories