coronachina
coronachina
  • இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1,82,143 லிருந்து 1,90,535 ஆக உயர்வு.
  • உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,164 லிருந்து 5,394 ஆக அதிகரிப்பு.
  • குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984 லிருந்து 91,819 ஆக உயர்வு

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 5,394 ஆகவும் அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

ஜூன் 1 இன்று காலை 09:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5,394 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,818 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 93,322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 230 பேர் உயிரிழந்துள்ளனர். 1,824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் .. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தற்போது அதிக பட்ச தாக்குதல்களுடன் ஏழாம் இடத்தில் இருக்கிறது இந்தியா.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending