விஜயவாடா மாணவர் மோதலில்… படுகாயம் அடைந்த இளைஞர் மரணம்!

இந்தியா கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்
vijayawada boy died

விஜயவாடா நகரில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களின் குழுச் சண்டையில் இளைஞர் ஒருவர் காலமானார்.

நிலத்தகராறு விஷயமாக மணிகண்டா, தோட்ட சந்தீப் என்ற இருவரிடையே எழுந்த விவாதம் தீவிரமான சண்டையில் முடிந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது இறந்தார். இதனால் மருத்துவமனை அருகில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.

சந்தீப் உடலை அரசாங்க மருத்துவமனையில் மார்ச்சுவரியில் வைத்துள்ளனர். சண்டையில் காயம் அடைந்த மற்றும் சிலர் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 40 பேர் இந்த சண்டையில் பங்கு கொண்டார்கள். அவர்களுள் ஓடிப்போன குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஆறு குழுக்களாக போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

students vijayawada
students vijayawada

நேற்று விஜயவாடா நகரில் கத்திகளாலும் பெரிய பெரிய கற்களாலும் தாக்கி கொண்ட இளைஞர்கள் மக்களிடம் பீதியை ஏற்படுத்தினார்கள். நகரத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் இடையே விவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கினார்கள். இந்த விவகாரத்தில் முன்னாள் ரௌடி ஷீட்டர் ஒருவர் தலையீடு இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இரு பிரிவுகளிடையே கத்தி கம்புகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.