
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் ஷர்மா வயது 43. அக்கோவுண்டண்ட் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி குசும் ஷர்மா (வயது 35). கல்யாணம் முடிந்த பிறகும் குசும் ஷர்மா, புரன் மஹாவர் (40) என்ற நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் 1998இல் இருந்த பழகி உள்ளனர். குசும் ஷர்மாவிற்கு கல்யாணம் முடிந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து சமூகவலைத்தளத்தில் மீண்டும் புரன் மஹாவர் அறிமுகமாகியுள்ளார்.
இருவர்க்கும் கள்ள உறவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் நீண்ட நாள்களாக இருவரும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் சுரேஷ் ஷர்மாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக Youtube-ல் வீடியோக்களை பார்த்து கணவனை கொலை எப்படி செய்வது என இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சம்வத்தன்று சுரேஷ் ஷர்மாவுக்கு போன் செய்த புரன், ‘உன் மனைவியை பற்றிய ரகசியங்களை சொல்கிறேன்’ என அவரை குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு தனியாக வர வழைத்துள்ளார்.
இதனை அடுத்து அங்கே வந்த சுரேஷை இருவரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். சாலையோரமாக கிடந்த சுரேஷ் ஷர்மாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ் ஷர்மாவின் மனைவி குசும் ஷர்மாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தனது கள்ள காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவரை கொலை செய்ததை குசும் ஷர்மா ஒப்புக்கொண்டுள்ளார். திருமணத்துக்கு முன்பே புரனுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, Youtube பார்த்து கணவரை கொலை செய்ததாக குசும் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குசும் ஷர்மா மற்றும் புரன் மஹாவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



