
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அறிவித்தது.
5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், 8 மண்டலங்களாக பிரிந்து, மண்டலம் விட்டு மண்டலம் சென்றால், இ-பாஸ் அவசியம், மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்றால் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று அறிவித்தது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பத்திரப்பதிவு டோக்கன்களை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தை விட்டு வெளியேறும் போது பத்திரப்பதிவு ஆவணத்தை ஆதாரமாக பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.