கொரோனா முடக்கத்தால் வறுமை! வாழைப்பழம் விற்ற ஆசிரியர்! கைகொடுத்த மாணவர்கள்!

Published:

banana teacher

கரோனா கஷ்ட காலத்தில் வாழைப்பழம் விற்று வந்த தம் டீச்சருக்கு பொருளாதார உதவி செய்த நெல்லூர் மாணவர்கள்.

பிரமுக தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் போதுமான அளவு மாணவர்களை சேர்க்கவில்லை என்று லாக்டௌன் சமயத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். வேறுவழியின்றி குடும்பத்தைக் காப்பாற்ற தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்று வருகிறார்.

நெல்லூரில் சாலைகளில் வாழைப்பழம் விற்றுவரும் ஆசிரியர்….
என்ன கொடுமையடா…! என்று சோஷல் மீடியாக்களில் சர்ச்சையாக மாறியது.

நெல்லூரில் லாக்டௌன் காரணமாக ஒரு ஆசிரியரின் வாழ்க்கை ஒரேடியாக தாறுமாறாக மாறியது. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ரோடில் வாழைப்பழ வண்டியை தள்ளிக் கொண்டு செல்கிறார். குடும்பத்தைக் காக்கவும், வாங்கிய கடனை அடைக்கவும் அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

banana teacher
banana teacher

கரோனா தொற்றுநோய் எத்தனையோ பேரை வீதிக்கு இழுத்து வந்துள்ளது. வேலை கிடைக்காமலும் இருந்த வேலையை இழந்தும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளார்கள். நாளைய இளைஞர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் கூட கஷ்டத்தில் உள்ளார்கள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் வேலை இழந்து வீதியில் அலைகிறார்கள்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஒரு டீச்சரின் வாழ்க்கைச் சித்திரம் ஒரேடியாக மாறிப்போனது. நெல்லூர் வேதாயபாளெம் என்ற ஊரைச் சேர்ந்த பட்டெம் வெங்கடசுப்பையா எம்ஏ பொலிட்டிகல் சயின்ஸ், எம்ஏ தெலுங்கு, பிஎட் படித்துள்ளார். 2008 லிருந்து ஒரு தனியார் கல்வி அமைப்பில் தெலுங்கு டீச்சராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி நிர்வாகம் லாக்டௌன் சமயத்தில் வீட்டிலிருந்தே ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வைத்தார்கள்.

புது அட்மிஷன்களை சேர்ப்பதற்கு டார்கெட் கூட பூர்த்தி செய்யும்படி கூறினார்கள். அந்த டார்கெட்டை பூர்த்தி செய்ய இயலாததாலும் அவரிடம் இந்த ஸ்மார்ட்போன் கூட ரிப்பேர் ஆனதாலும் கல்வி நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. வேலையும் இன்றி வாழ்க்கை வண்டியை தள்ளுவதற்கு சிரமப்பட்ட வெங்கட சுப்பையாவுக்கு வாழைப்பழ தள்ளுவண்டி கைகொடுத்தது.

தன் மகனின் வைத்திய செலவுக்காக 3.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது பாரமாக தலை மேல் ஏறியது. இறுதியில் நண்பர்களின் உதவியோடு தள்ளுவண்டியில் வாழைப்பழங்கள் விற்று வருகிறார். குடும்பத்தை வாழ வைப்பதற்கும் வாங்கிய கடனை அடைப்பதற்கும் இவ்வாறு வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறேன் என்று சுப்பையா கூறுகிறார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

மாணவர்களுக்கு பாடம் சொல்லும் டீச்சர் இவ்வாறு வீதியில் வாழைப்பழம் விற்பது சோஷியல் மீடியாவில் சர்ச்சைக் குள்ளாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதனைக் கேள்விப்பட்ட அவருடைய மாணவர்கள் பொருளாதார உதவி செய்தனர்.

banana teacher
banana teacher

தம் ஆசிரியர் இப்போது மிகவும் கடினமான பொருளாதார தேவையில் உள்ளார் என்ற செய்தியை சோஷல் மீடியா மூலம் அறிந்து அவரிடம் முன்பு படித்த மாணவர்கள் உதவிக்கு வந்தார்கள். தம் குருவுக்கு 86,300 ரூபாய் பொருளாதார உதவி செய்துள்ளார்கள். முன்பு அவரிடம் படித்த ஷியாம் என்ற மாணவர் தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். செய்தி கேள்விப்பட்டு ஆசிரியருடைய அக்கவுண்டில் 50 ஆயிரம் ரூபாய் சேர்த்தார. ஒய்சிபி யுவஜன சோஷியல் மீடியா தலைமையில் கூட 20,000 அவருக்கு அளித்தார்கள். தன்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் செய்த உதவிக்கு வெங்கடசுப்பையா நன்றி தெரிவித்தார்.

கீழே வீடியோ… என் வேலையும். போய்விட்டது. என் இரண்டாவது மகனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் இருந்த எனக்கு உதவி செய்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img