
குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கும் பொருட்களில் அல்லது குழந்தைகளாகவே எடுக்கும் பொருட்களில் பெற்றோர்கள் கவனத்துடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது
குஜராத் மாநிலம் பவா நகரில் ஒரு வீட்டில் பெற்றோர் இருந்துள்ளனர். அவர்களுக்குபிரியன்ஷி வாலா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
அவர்களது ஒரு வயது பெண் குழந்தை குக்கரை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் எதிர்பாராதவிதமாக குக்கருக்குள் தலை சிக்கிக் கொண்டது.
திடீரென குழந்தை அலறலை கேட்டபிறகுதான் பெற்றோர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த குக்கரை உடனே வெளியே எடுக்க பார்த்தனர். அவர்களால் முடியவில்லை. அதனால் உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அவர்களும் ஓடிவந்து தலையில் சிக்கியிருந்த குக்கரை வெளியே எடுக்க முயற்சித்தனர்..
மேலும் குழந்தையின் தலையும் வீங்க ஆரம்பித்துவிட்டது.அதை பார்த்து இன்னும் பயந்துபோன பெற்றோர், உடனடியாக சர் டி மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினர். குழந்தைகள் நிபுணராலும் குக்கரை எடுக்க முடியவில்லை.
அதனால் எலும்பு சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டு, அவரும் முயற்சித்தார். அப்போதும் குக்கருக்குள் தலை கெட்டியாக மாட்டிக் கொண்டுதான் இருந்தது. கடைசியில் பாத்திரங்கள் ரிப்பேர் செய்பவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்தான் அந்த குக்கரை வெட்டி உள்ளார். அதன்பிறகே குழந்தையை காப்பாற்ற முடிந்திருக்கிறது.
குழந்தையின் உயிருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் காயங்கள் நிறைய உள்ளன. குழந்தை இன்னமும் சிகிச்சையில்தான் இருக்கிறாள்.. அவளது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய், தலை பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று கவனித்து கொண்டிருக்கிறோம்.குழந்தை நலமான பிறகே வீட்டுக்கு அனுப்பி வைப்போம்” இவ்வாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.