
புது தில்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் – பாரதப் பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தையின் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச் 1 பி விசா குறித்து ஆலோசனை எதுவும் நடத்தப் பட வில்லை என்று கூறியுள்ளார் வெளியுறவுச் செயலர்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அவர்களது பேச்சு வார்த்தை தொடர்பாக வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது, அவரிடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச் 1 பி விசா குறித்து இருவரும் ஆலோசித்தார்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், வர்த்தகத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இரு நாட்டு தலைவர்கள் ஆலோசனையின் போது, டிஜிட்டல் ஒத்துழைப்பு மற்றும் ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதில், இந்திய – அமெரிக்க சமுதாயம் முக்கியப் பங்காற்றியுள்ளது எனக் கூறினார். எனவே, அப்போதும் சரி, இரு நாடுகள் இடையே வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் சரி, ஹெச் 1 பி விசா குறித்து எதுவும் இடம்பெறவில்லை என்பது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.



