
சென்னை:
தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். நெல்லை, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். முறையாக வரி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



