மாஸ்க் எங்கே என்று கேட்ட சக பெண் ஊழியரை கட்டையால் தாக்கிய மேலாளர்!

இந்தியா சற்றுமுன்
nwllur
  • என்னையா மாஸ்க் அணியச் சொல்கிறாய்?
  • நெல்லூரில் ஏபி டூரிசம் டிஜிஎம் பாஸ்கர் கொடூரம்.
  • அலுவலகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்.
  • நெல்லூரில் இந்த கொடுமையான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆந்திர சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெல்லூர் ஹோட்டல் ஒன்றில் துணை மேலாளராக பணிபுரிபவர் பாஸ்கர். கடந்த ஜூன் 27 அன்று இவருக்கும், ஹோட்டலில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளார். சக ஊழியர் ஒருவர் அவரைத் தடுக்க முயற்சித்தும், அவர் தொடர்ந்து அருகில் உள்ள கட்டையை எடுத்து பெண்ணைத் தாக்கியுள்ளார்.

மாநில சுற்றுலா வளர்ச்சி அமைப்பு மாவட்ட அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர் மீது தாக்குதல் செய்த உயர் அதிகாரி. பிற ஊழியர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்தப் பெண் ஊழியரின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். கைக்கு கிடைத்த பொருட்களால் அவரை அடித்து நொறுக்கினார். அலுவலகத்தில் சிசிடிவி கேமரா இருக்கிறது என்ற விஷயம் தெரிந்தும் கூட அந்தப் பெண் ஊழியர் மீது தாக்குதலுக்கு முற்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அத்தகைய உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கும்போது ஒரு பெண் ஊழியரைப் போட்டு அடித்ததற்கு காரணம் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள் என்று அவர் குறிப்பிட்டது தான்.

nellur

இந்த மாதம் 27ம் தேதி நடந்த இந்த சம்பவம் தாமதமாகவே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் தொடர்பான சிசிடிவி புடேஜ் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பெண் ஊழியர் மீது தாக்குதலுக்கு முற்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் டிமாண்ட் செய்கிறார்கள். இதன் மீது மாநில மஹிளா கமிஷன் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள்.

இந்த அதிகாரியின் பெயர் பாஸ்கர். நெல்லூர் மாவட்டம் சுற்றுலா வளர்ச்சி அமைப்பில் டெபுடி ஜெனரல் மேனேஜராக பணிபுரிகிறார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போதுள்ள நிலையில் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசாங்கங்கள் கட்டாயப் படுத்துகின்றன.

nellur

ஆனாலும் இந்த மாதம் 27 ஆம் தேதி பாஸ்கர் மாஸ்க் அணியாமலேயே பணிக்கு வந்தார். தன் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களோடு மீட்டிங்கில் பங்கு பெற்றார்.

இதனைப் பார்த்த பெண் ஊழியர் ஒருவர் மாஸ்க் அணியுங்கள் என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது இவருக்கு தப்பாக தென்பட்டது . தன்னை மாஸ்க் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டதற்காக அந்த பெண் ஊழியரை தாக்கத் தொடங்கினார். “எனக்கு வைரஸ் வந்துவிட்டது என்கிறாயா? என்னை எதிர்த்து பேசுகிறாயா?” என்று அந்த பெண் ஊழியரை தீவிரமாக அடித்தார். தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். கையில் கிடைத்த பொருட்களால் இஷ்டம்போல் அடிக்கத் தொடங்கினார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் ரெக்கார்டு ஆகியுள்ளன. அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் நெல்லூர் போர்ட் டௌன் போலீஸ் ஸ்டேஷனில் சென்று பாஸ்கர் மீது புகார் அளித்தார். அவருடைய புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அன்றைய தினமே பிற்பகல் அந்த பெண், நெல்லூர்-4 டவுன் காவல் நிலையத்தில் பாஸ்கருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து பாஸ்கரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.