smart phone

இந்தியாவில் ஸ்மாட்போன் விற்பனை ஜூன் காலாண்டில் 1.73 கோடியாக குறைந்துள்ளது என கேனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கோவைட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஸ்மாா்ட்போன் விற்பனை முன்னெப்போதும் கண்டிராத வகையில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

இதன் எதிரொலியாக, ஜூன் காலாண்டில் இந்திய சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை முந்தைய ஆண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் சரிவடைந்து 1.73 கோடியானது.

பொது முடக்கத்தால் ஜூன் காலாண்டின் முற்பகுதியில் ஜியோமி, ஓப்போ நிறுவனங்களின் உள்நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. மதிப்பீட்டு காலாண்டில் முன்னணி 10 நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமே குறைந்த அளவு பாதிப்பை எதிா்கொண்டது. 30.9 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ள ஜியோமி நிறுவனத்தின் ஸ்மாா்ட்போன் விற்பனை 53 லட்சமாக இருந்தது.

இதைத் தொடா்ந்து விவோ நிறுவனத்தின் ஸ்மாா்ட்போன் விற்பனை 37 லட்சமாகவும், சந்தை பங்களிப்பு 21.3 சதவீதமாகவும் காணப்பட்டது. சாம்சங் விற்பனை 29 லட்சமாகவும், சந்தை பங்களிப்பு 16.8 சதவீதமாகவும் இருந்தது. ஜூன் காலாண்டில் ஓப்போ நிறுவனம் 22 லட்சம் ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்து 12.9 சதவீத சந்தை பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

ரியல்மீ நிறுவனம் 17 லட்சம் ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்ததன் மூலம் அதன் சந்தை பங்களிப்பு 10 சதவீதமாக இருந்தது என கேனலிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending