சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று ( 22 ம்
தேதி) நள்ளிரவில் மாற்றப்பட்டார். கடந்த 2 மாதத்தில் கண்காணிப்பாளர்
மாற்றப்படுவது 6 வது முறை ஆகும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபப்பன அஹ்ரஹார சிறையில் சசிகலா
அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைக்கு சென்ற நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள்
எழுகிறது. அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரி ரூபா அதிரடி
தகவலை வெளியிட்டார். இது முதல் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சசிகலா கையில் பையுடன் வெளியே சென்று வந்தது போல் ஒரு
வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானது எப்படி என விசாரிக்கப்பட்டு
வருகிறது.
இந்நிலையில் தற்போது சிறை கண்காணிப்பாளர் நிக்காம் பிரகாஷ் அம்பரீட்
நள்ளிரவில் மாற்றப்பட்டார்.
சசிகால கடந்த ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார. அன்று முதல் தற்போது வரை 6
சிறை கண்காணிபபாளர்கள் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




