இங்கேயே இருந்தால் இறந்து விடுவோம்… கோவிட் சென்டரில் கொரோனா நோயாளிகள் போராட்டம்!

Published:

covid-patients
covid-patients

நெல்லூர் மாவட்டம் கூடூரில் தமக்கு அடிப்படை வசதிகள்கூட ஏற்படுத்தித் தரவில்லை என்று கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலான மருத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் எத்தனை எடுத்துச் சொன்னாலும் சில இடங்களில் சில மருத்துவ ஊழியர்கள் மட்டும் தம் வழி முறையை மாற்றிக் கொள்வதில்லை. நோயாளிகளை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு நோயாளிக்கும் தினமும் 500 ரூபாய் செலவில் உணவளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளுக்கு எந்த நிலைமையிலும் மேலான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதல்வர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனாலும் சில இடங்களில் மிகவும் மோசமான சூழ்நிலைகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டே உள்ளன.

covid-patients1
covid-patients1

அண்மையில் நெல்லூர் மாவட்டம் கூடூர் நகரத்தில் உள்ள கோவிட் சென்டரில் நோயாளிகள் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தம்மை இங்கு கண்டுகொள்பவர்கள் யாருமே இல்லை என்றும் ட்ரீட்மென்ட் சரியாக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்கள்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

தமக்கு சரியான மருத்துவமும் மேற்பார்வையும் இல்லை என்றும் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தரவில்லை என்றும் ஆத்திரப்பட்டார்கள். இத்தகு நிலைமையில் கோவிட் கேர் சென்டர் இருக்கும்போது இந்த இடத்தில் நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்? எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள். தனியார் மருத்துவமனையில் நாங்கள் சென்று சேருகிறோம். அல்லது வீட்டிலேயே இருந்து தகுந்த ஜாக்கிரதை எடுத்துக் கொள்வோம் என்று அவர்கள் கூறிவருகிறார்கள்.

எந்த வசதியும் இன்றி இங்கேயே இருந்தால் நாங்கள் இறந்து போவது நிச்சயம் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img