
மஹாராஷ்டிராவில் மாட்டுப்பொங்கல்
- ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
மஹாராஷ்டிர மாநிலத்தில் சிராவண ( ஆவணி) மாத அமாவாசையன்று காளை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பைல் போளா ( Bail Pola) கொண்டாடப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் காளை மாடுகளுக்கு அருமையாய் அலங்காரங்கள் செய்வர். சிலர் காளையின் உடம்புப் பகுதியில் சூழ்நிலைக்கேற்றவாறு
பலவித வாசகங்களை எழுதுவது அனைவரையும் கவருவதாய் இருக்கும்.
மாலையில் காளை மாடுகளை ஒரு பொது இடத்தில் அழைத்து வந்து மிகப்பெரும் பூஜை செய்கின்றனர். சிறந்த காளை ஜோடிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
பின்னர், விவசாயிகள் தங்கள் காளை மாட்டினை வீடுகளுக்கு அழைத்து வருவர். பெண்களும் இல்லங்களில் வண்ண வண்ண ‘ரங்கோலிகள்’ இடுவர்.

பிரசாதமாக மஹாராஷ்டிராவின் உணவான பூரண் போளியை காளை மாடுகளுக்கு வழங்கிய பின்னரே பலப் பெண்கள் உணவருந்துவர்.
விவசாயிகளுக்கு இனாமும் தருவர். இந்த 140 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்படும் இத்திருநாள் இந்த ஆண்டு கொரானாவினால் சற்றே களையிழந்துள்ளதாலும், விவசாயிகள், தங்கள் விவசாயம் உயரும் என்ற நம்பிக்கையுடனுனேயே இன்று பைல் போளா மாநிலம் முழுவதும் தத்தம் வீடுகளில் கொண்டாடுகிறார்கள்.



