கொரோனா: கணவர் இறந்ததால்… மகன் மகளுடன் கோதாவரியில் குதித்த மனைவி!

இந்தியா
family-suicide
family-suicide
  • குடும்பத்தோடு நதியில் பலி கொண்ட கொரோனா தொற்று.
  • கொரோனா பெருந் தொற்றுநோயால் ஒரு குடும்பம் துயரத்தில் ஆழ்ந்தது.

குடும்பத்தின் தலைவர் கொரோனாவால் இறந்ததால் மனைவி, மகன், மகள் அனைவரும் செவ்வாய் அன்று நள்ளிரவு கோதாவரியில் குதித்தார்கள்.

மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூரு மண்டலம் பசிவேதலையைச் சேர்ந்த நரசய்யா இந்த மாதம் 16ம் தேதி கொரோனாவால் மரணமடைந்தார்.

குடும்பத் தலைவர் மரணித்தும் உறவினர்களோ நண்பர்களோ விசாரிப்பதற்கு கூட வரவில்லை. அதனால் மன வருத்தத்துக்கு ஆளான சுனிதா (50) அவர் மகன் மணிக்குமார் (25) மகள் அபர்ணா (23) மூவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.

நரசய்யா விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வீட்டுத் தலைவர் இறந்ததால் அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ரயில்வே பிரிட்ஜின் மேலிருந்து இவர்கள் மூவரும் கோதாவரியில் குதித்து மூழ்கி இறந்தனர். கோதாவரியில் வெள்ளம் மிக அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுவதால் இறந்தவர்களின் உடல்களைத் தேடி எடுப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.