கொரோனாவால் பத்திரிகையாளர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவி: பஞ்சாப் முதல்வர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
amrendra-singh
amrendra-singh

பஞ்சாபில் கொரோனாவால் பத்திரிக்கையாளர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்! .

ஒருபுறம் கொரோனா பரவல் அதிவேகமாக உள்ளது. மறுபுறம் அதில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மக்களுக்கும் சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா தாக்குதலுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள், களப்பணியாளர்கள் மட்டுமல்லாது, ஊடகத்தினரும் அதிகம் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாபில் கொரோனாவால் பத்திரிக்கையாளர்கள் யாரும் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பஞ்சாபில் கொரோனாவால் அங்கீகரிகப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் யாரும் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும்… என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டியாலாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் நேற்று கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த முடிவினை அவர் அறிவித்துள்ளார்!

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.