மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலமில்லாததால், முக்கிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி இழக்கவுள்ளது.
இதுதொடர்பாக, மாநிலங்களவைச் செயலக வட்டாரங்கள் கூறியது:
மொத்தமுள்ள 8 மாநிலங்களவை நிலைக் குழுக்களில் உள்துறை விவகாரங்கள், அறிவியல் தொழில் நுட்பம், சட்டம் – நீதி, பணியாளர் விவகாரங்கள் என 3 குழுக்களின் தலைவர் பதவி காங்கிரஸ் வசம் உள்ளது.
இவற்றில், சட்டம்- நீதி, பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆகிய விவகாரங்களுக்கான நிலைக் குழுவானது, அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பாக அறிக்கை அளிக்கும் முக்கிய நிலைக் குழு. அந்தக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த் சர்மா உள்ளார். அவருக்குப் பதிலாக, அந்தப் பதவியில் பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



