
கோவில்களை புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது… ஜெகனுக்கு ரமண தீட்சிதர் புதிய அறிவுறுத்தல்.
சந்திரபாபுவின் அரசாட்சியில் இடிப்புக்கு ஆளான கோவில்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோவில்களின் புனர்நிர்மாணம் மற்றும் ஜீர்ணோத்தாரணத் திற்கான முகூர்த்தம் கூட தீர்மானித்து முடிவு செய்தது.
வெள்ளிக்கிழமை புனர் நிர்மாண வேலைகளுக்கு ஜெகன் அஸ்திவாரம் போடும் நிகழ்ச்சியை நடத்தப் போகிறார். இதுதொடர்பாக ஏற்பாடுகள் அனைத்தையும் அறநிலையத்துறையும் ரெவின்யூ அமைச்சக துறையும் பூர்த்தி செய்துள்ளன.
இந்த நிலையில் மற்றுமொரு புது பரிந்துரை அரசாங்கத்தின் முன்வந்துள்து. திருமலா திருப்பதி தேவஸ்தானம் பிரதான அர்ச்சகர், ஆகம அறிவைரையாளர் ஏவி ரமண தீட்சிதர் இந்த வற்புறுத்தலை எழுப்பியுள்ளார். ஆலயங்களைப் புனர்நிர்மாணிப்பது குறித்து அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதோடு அதில் ஒரு சிக்கலையும் புகுத்தியுள்ளார்.
கலியுக வைகுண்டம் திருமலையில் ஆயிரங்கால் மண்டபத்தை கூட புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் வழியில் உடனடி நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளும் அம்சத்தை பரிசீலிக்க வேண்டும் என்று அவர் ஜெகன் மற்றும் திருமலா திருப்பதி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டிக்கும் விண்ணப்பம் அளித்துள்ளார். ஆயிரங்கால் மண்டபம் கூட சந்திரபாபு நாயுடு காலத்தில் இடிக்கப்பட்டது என்ற விஷயத்தை அவர் நினைவுபடுத்தினார்.
இதோடு கூட தேர் மண்டபத்தையும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த இரண்டு நிர்மாணங்களையும் அதிக விரைவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆயிரம் கால் மண்டபம் கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் ஸ்ரீனிவாச பக்தர்களின் மனநிலையோடு முடிபட்டு உள்ளது என்று அம்சத்தையும் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் இடிப்புக்கு ஆளான கோவில்களை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சியை அரசாங்கம் எடுத்துக் கொள்வது குறித்து ரமண தீட்சிதர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்வந்த ஒய்எஸ் ஜெகனுக்கு திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுமென்று கோருவதாகத் தெரிவித்தார்.
கோவில்களை புனர்நிர்மாணம் செய்வது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்றார். தடையின்றி தொடர்ந்து புனர் நிர்மாணப் பணிகளை நடக்க வேண்டுமென்று ஶ்ரீவாரு சுவாமியை பிரார்த்திப்பதாக கூறினார்.