சாதி மற்றும் குடும்ப அரசியலை வீழ்த்தியுள்ளது குஜராத் பாஜக… ஹெச்.ராஜா பெருமிதம்!

இந்தியா சற்றுமுன் சென்னை

குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேசம் இரு மாநிலங்களிலும் பாஜக., ஒட்டு மொத்தமாக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் சட்ட மன்றத்தில் பாஜக., பெரும்பான்மை மட்டும் பெறவில்லை, வாக்காளர்களிடமும் பெரும்பான்மை பெற்றுள்ளது. குஜராத் பாஜக., 50.8% வாக்குகளைப் பெற்று, பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸின் சாதி அரசியலையும், குடும்ப அரசியலையும் எதிர்கொண்டு குஜராத்தில் வீழ்த்தியுள்ளது பாஜக., என்று பெருமிதமாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.


மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்திருந்தால் எப்படி காங்கிரஸ் 70 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்க முடியும் என்று பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக., வின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றதால் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று பதிலளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.